மனதால் நேசிக்கும் எந்த ஒரு பொருளையும் மனிதன் என்றாவது ஒருநாள் பிரிந்தே ஆகவேண்டும். இந்த நியதிக்கு யாரும் விதிவிலக்கல்ல! எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள் அது வேறோருவருடையதாகிறது. இந்த மாற்றம் உலக நியதி ஆகும்.

Sunday 23 November 2014

02. முன்னுரை - 2

சிரார்த்தம்;

ஒவ்வொரு உயிரின் எண்ண உணர்வதிர்வுகள் அந்த ஜீவனை கட்டு படுத்துகின்றன. இந்த அதிர்வுகள் நீக்கி அவை விடுபட்டு செல்ல இந்த சிரார்த்தம் வழிவகை செய்கிறது. இதன் விளைவாக உடலை விட்ட உயிரானது எல்லாவகை உணர்வு பிணைப்புகளில் இருந்தும், அதிர்வுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டு தக்க உலகத்தை சென்றடையும்.


வருடம் ஒருமுறை முன்னோர்கள் இறந்த திதியில் செய்யப்படும் சிரார்த்தத்தை தவிர அமாவாசை மகாளயபட்சம், மாதப்பிரப்புகள், சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் ஆகிய நாட்களில் செய்யப்படும் தர்ப்பணங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

தந்தை இறந்த பிறகே தர்ப்பணம் செய்யும் உரிமை மகனுக்கு வருவதாக சாஸ்த்திரங்கள் கூறுகின்றன. அப்படி செய்யப்படும் தர்ப்பணங்கள் தந்தை வழியில் முன் தோன்றிய முன்னோர்கள் ஆறு பேருக்கும், தாய் வழியில் முன் தோன்றிய ஆறு பேருக்கும் சேர்த்து, மொத்தம் பன்னிரண்டு பேருக்கு செய்யவேண்டும். அதாவது மூன்று தலைமுறைகளுக்கு செய்யவேண்டும்.

காசி, கயா, பத்ரிநாத், இராமேஸ்வரம் போன்ற புண்ணிய தளங்களில் பிரம்மகுண்டத்தில் பித்ருக்களுக்கு சிரார்த்த கர்மங்களை செய்துவிட்டால் பிறகு வருடந்தோறும் வீட்டில் அவர்கள் இறந்த திதியில் கர்ம காரியங்கள் செய்யவேண்டியதில்லை என்று ஒரு நம்பிக்கை உள்ளது.

இது தவறு. புண்ணிய தளங்களில் செய்வதால் அதிக புண்ணியமும், பலனும் கிடைக்கும். அதனால், தொடர்ந்து வருடா வருடம் தவறாமல் பிதுர் காரியங்களை தவறாமல் செய்ய வேண்டும்.

கருடபுராணத்தை படிக்க துவங்குவதற்கு முன், மேற்கண்ட விவரங்களை தெரிந்து கொள்வது அவசியம்.

இப்புராணமானது பகவான், கருடனுக்கு கூறும் கேள்வி – பதில் பாணியில்  அமைந்துள்ளது.

இனி, வியாசர் அருளிய பதினெட்டு புராணங்களில் ஒன்றான கருட புராணத்தை பகவானை வணங்கி படிக்க தொடங்குவோம்......

No comments:

Post a Comment