மனதால் நேசிக்கும் எந்த ஒரு பொருளையும் மனிதன் என்றாவது ஒருநாள் பிரிந்தே ஆகவேண்டும். இந்த நியதிக்கு யாரும் விதிவிலக்கல்ல! எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள் அது வேறோருவருடையதாகிறது. இந்த மாற்றம் உலக நியதி ஆகும்.

Wednesday 3 December 2014

சித்ரகுப்தன்

பெரும்பாலான மக்களால் ஒருவித பயத்தோடு பார்க்கப்படும் எமலோகத்தில், மனிதர்களுக்கான கணக்கு- வழக்கை பார்ப்பவர் சித்ர குப்தன், இவர் தோன்றியது சித்ரா பவுர்ணமி அன்றுதான். அதனால்தான், இவருக்கு சித்ர குப்தன் என்ற பெயர் ஏற்பட்டது.

பூலோக வாழ்வை முடித்துக் கொள்ளும் உயிர்கள் சொர்க்கம் அல்லது நரகத்திற்கு செல்வதாக பெரும்பாலான பேர் நம்புகிறார்கள்.

ஒவ்வொருவரும் செய்கின்ற பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப, அவர்கள் செல்வது நரகமா? அல்லது சொர்க்கமா? என்பது தீர்மானிக்கப்படுகிறது என்பது நம்பிக்கை. யார் என்னென்ன புண்ணியம் செய்தார்கள்? பாவம் செய்தவர்கள் யார்-யார்? இதற்கெல்லாம் ஒரு கணக்கு-வழக்கு வேண்டும் அல்லவா? அதை, கவனிப்பவர்தான் சித்ரகுப்தன்.

ஆரம்பத்தில் எம தர்மராஜா தான் இந்த கணக்கு-வழக்கை எல்லாம் பார்த்து வந்தார். அவரது வேலைப்பளு அதிகமானதால் சிவபெருமானிடம் சென்று தனக்கு உதவியாளர் ஒருவர் வேண்டும் என்று கேட்டார்.சிவபெருமானும் ஒரு சித்திரத்தை வரைந்து கொடுத்து, இவனைப்போல் ஒருவனை படைக்குமாறு பிரம்மாவை கேட்டுக் கொண்டார்.

பிரம்மாவும் அதன்படியே ஒருவனை சித்ரா பவுர்ணமி நாளில் படைத்தார். அவரே சித்ரகுப்தன். நரகலோகம் செல்லும் மனித உயிர்களுக்கு அவர்கள் செய்த பாவங்களுக்கு ஏற்ப பல்வேறு தண்டனைகள் வழங்கப்படுவதாக கூறுகிறது கருட புராணம்.

அடுத்தவன் மனைவியை அபகரித்துக் கொண்டவர்கள் கொதிக்கும் எண்ணெய் சட்டியில் போட்டு வறுக்கப்படுவார்கள்...

கொலை செய்தவர்கள் உலக்கையால் அடித்து, பாழுங்கிணற்றில் தள்ளப்படுவார்கள்...

மனைவிக்கு துரோகம் செய்தவர்களின் இரண்டு கண்களும் பிடுங்கப்படும்... - இப்படி பாவம் செய்தவர்களுக்கு நரகத்தில் என்னென்ன தண்டனைகள் வழங்கப்படும் என்று பட்டியலிடுகிறது கருடபுராணம்.

ஒருவரது உயிர் செல்ல வேண்டியது சொர்க்கத்திற்கா? அல்லது நரகத்திற்காக? என்பதை எம தர்மராஜாவிடம் எடுத்துரைக்கும் சித்ரகுப்தன், சற்று குள்ளமான வடிவம் கொண்டவர். வலது கையில் எழுத்தாணியும், இடது கையில் ஒரு ஏட்டையும் தாங்கி, வலது காலை ஊன்றியபடியும், இடது காலை மடித்து அமர்ந்தபடியும் காட்சித்தருவார்.


சொர்க்கத்திற்கு செல்ல வேண்டும் என்றாலும், நரகத்தில் குறைந்த பட்ச தண்டனை வேண்டும் என்றாலும், இவர் அருள் ஒருவருக்கு இருந்தால்தான் முடியும்.

சித்ரா பவுர்ணமி அன்று இவரை மனம் உருகி வழிபடுவதன் மூலமும், செய்த பாவங்களுக்கு தகுந்த பரிகாரம் செய்வதன் மூலமும், எந்த சூழ்நிலையிலும் பாவம் செய்யாது இருப்பதன் மூலமும் அவர் அருளை எளிதில் பெறலாம்.

No comments:

Post a Comment