மனதால் நேசிக்கும் எந்த ஒரு பொருளையும் மனிதன் என்றாவது ஒருநாள் பிரிந்தே ஆகவேண்டும். இந்த நியதிக்கு யாரும் விதிவிலக்கல்ல! எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள் அது வேறோருவருடையதாகிறது. இந்த மாற்றம் உலக நியதி ஆகும்.

Thursday 19 November 2015

34. கருடபுராணத்தின் நிறைவு பகுதி

ருடனே! பாவங்களை செய்தவர்கள் நரகத்தில் வீழ்ந்து மிகவும் துன்புறுவார்கள். ஒருவன் யாருக்கும் தீமையே செய்யாமல் நன்மை செய்து இறந்தால் அவன் சர்வ சத்தியமாக சொர்கலோகத்தையே அடைவான். அதன் பிறகு நல்ல திருத்தலத்தில், உயர்ந்த குலத்தில் பிறந்து சிறப்புடன் வாழ்வான்.

கருடனே! இந்த புராணத்தை  தந்தை இறந்த காலத்தில் தீட்டு நீங்குவதற்குள் ஒருவன் கேட்டால், இறந்த தந்தை மோட்சத்தை அடைவான். தாய் இறந்த போது இந்த புராணத்தை கேட்டால், இறந்த தாய் சொர்க்கத்தை அடைவாள்.   இதைத்தவிர தை மாத விக்ஷூ புண்ணிய காலத்திலும், கிரகண காலத்திலும், திவச காலத்திலும் இந்த புராணத்தை படித்தாலும், கேட்டாலும் நல்லுலகை அடைவான்.

கன்னிகாதானங்கள் செய்தல், நூறுமுறை தானம் செய்தல், கயா சிரார்த்தம் செய்தல் ஆகியவற்றால் வரு புண்ணியங்களை விட, இப்புராணத்தை கேட்டாலும், படித்தாலும் அதிக புண்ணியம் உண்டாகும். எமலோக பயம் ஏற்படாமல் இருக்கவும், சொர்கத்தை அடையும் வழிகளையும் தெரிவிப்பதற்காகவே இந்த புராணத்தை உனக்கு கூறினேன்.” என்றார் பகவான்.

கருடன் மிகவும் மனம் மகிழ்ந்து பகவானை நோக்கி, “கருணைக்கடலே, காருண்யமூர்த்தியே! உலகுக்கு நீரே வேதங்களை ஓதியருளினீர்கள். அதே வாயால் எனக்கு இந்த புராணத்தை சொல்லி அருளனீர்கள். எனக்கு ஏற்ப்பட்ட சந்தேகங்களுக்கெல்லாம் விளக்கம் கொடுத்தீர்கள். நான் பாக்யசாலி. நான் இப்புராணத்தை கேட்க என்ன தவம் செய்தேனோ...” என்று கூறி, பகவானை வளம் வந்து வணங்கி மகிழ்ந்தான்.

இப்போது கதையை கூறிமுடித்த சூதமுனிவர், மற்ற நைமிசாரண்ய முனிவர்கள் பார்த்து கூறுகிறார், “முனிவர்களே! நீங்கள் கேட்டபடி ஆறாம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு வகை புருஷாத்தங்களைப் பற்றி பற்றி விளக்கும் புராணத்தை பற்றி உங்களுக்கு கூறினேன்.” என்று கூறி முடித்தார். பின்னர் அனைவரும் பகவானின் நாமங்களைப் போற்றி பாடி மகிழ்ந்தனர்.


 ஸ்ரீ கருடபுராணம் நிறைவு பெறுகிறது!

No comments:

Post a Comment