மனதால் நேசிக்கும் எந்த ஒரு பொருளையும் மனிதன் என்றாவது ஒருநாள் பிரிந்தே ஆகவேண்டும். இந்த நியதிக்கு யாரும் விதிவிலக்கல்ல! எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள் அது வேறோருவருடையதாகிறது. இந்த மாற்றம் உலக நியதி ஆகும்.

Monday 16 November 2015

புராணங்கள் என்பது மனித வாழ்க்கையை சீர் படுத்தவும், மானிடன் எப்படி வாழ வேண்டும் என்பதை எடுத்துக்காட்டவும் எழுதப்பட்டது.

லியுகத்தில் மானிடன் பாவத்தை கண்டு பயப்பட மாட்டான் துணிந்து செய்வான் . புண்ணியத்தை தேட மாட்டான் . இப்படி பட்ட தண்டனைகள் இருக்கிறது .என்று பயந்து தவறு செய்ய மாட்டார்கள் .என்பதற்காக எழுதப்பட்டது.

அதற்காக இது பொய் இல்லை .அவர் அவர் செய்த பாவத்திற்காக அந்த பிறவியிலேயே கருடபுராணம் படி தண்டிக்க படுகிறான்.

உதாரணமாக கருடபுரணத்தில் வண்டி சக்கரங்களை மானிட ஆத்மாக்களின் மேல் ஏற்றி துன்புறுத்தும் தண்டனை உள்ளது . எத்தனை மானிட உயிர்கள் வாகனங்களுக்கு அடியில் மாட்டிக்கொண்டு துன்பப்பட்டு இறக்கிறது .

கருடபுராணத்தில் நெருப்பில் துன்புறுத்தும் தண்டனை உள்ளது . எத்தனை மானிட உயிர்கள் நெருப்பால் எரிந்து துடிதுடிக்க தினமும் மாண்டு கொண்டு இருக்கிறார்கள் .

இதை போலவே மானிடன் செய்யும் ஒவ்வரு பாவத்திற்கும் அந்த பிறவியிலேய தண்டனை அனுபவிக்கிறான் .

இந்த உண்மைகளை ஞானம் பிறந்தால் எளிதாக காணலாம். மகனே! எப்படி மானிடனுக்கு உடல்நிலை சரியில்லாத நேரங்களில் மருந்து சாப்பிடுகிறானோ, அதுபோலத்தான் மனநிலை சரியில்லாத போது புராணங்கள் மருந்தாக பயன்படுகிறது. . அறிந்துகொள் .புராணங்களை புரிந்துகொள்.

No comments:

Post a Comment