மனதால் நேசிக்கும் எந்த ஒரு பொருளையும் மனிதன் என்றாவது ஒருநாள் பிரிந்தே ஆகவேண்டும். இந்த நியதிக்கு யாரும் விதிவிலக்கல்ல! எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள் அது வேறோருவருடையதாகிறது. இந்த மாற்றம் உலக நியதி ஆகும்.

Wednesday 18 November 2015

குடை தானக்கதை


குடை தானம் பற்றிய ஒரு சின்ன புராணக்கதை. 

ஒருவன் தன் சக்திக்கு மீறி குடை தானம் செய்தானாம். யாரோ அது நல்லது என்று அவனிடம் சொல்லி இருந்தார்கள். எனவே, எவ்வளவு கஷ்டத்திலும் அவன் குடை தானம் செய்து வந்தானாம். 

அதன் விளைவாக அவன் அடுத்த ஜன்மத்தில் அரசனாக பிறந்தானாம்.....

அவனுக்கு அதிருஷ்ட வசமாக பூர்வ ஜன்ம நினைவும் இருந்தது....எனவே, இந்த ஜன்மத்திலும் மறக்காமல் குடை தானம் செய்தானாம்......................ஆனால் அவன் அடுத்த ஜன்மத்தில் முன்பு போலவே 'தரித்திரனாக' பிறந்தானாம்......

இப்போதும் அவனுக்கு பூர்வ ஜன்ம நினைவுகள் இருக்கவே அவன் ஒரு யோகியை அணுகி விவரம் கேட்டானாம்.......அதற்கு அவர் சொன்னாரம்............"முன்பு கஷ்டப்பட்ட போதும் குடை தானம் செய்தாய், ஆனால் அரசனானதும் எவ்வளவோ செய்திருக்கலாம் அதை விடுத்து மீண்டும் இவ்வளவு சின்ன தானத்தை செய்தாய் .அதன் பலன் தான் இது " என்றாராம் யோகி.

நன்றி: கிருஷ்ணாம்மா

No comments:

Post a Comment