மனதால் நேசிக்கும் எந்த ஒரு பொருளையும் மனிதன் என்றாவது ஒருநாள் பிரிந்தே ஆகவேண்டும். இந்த நியதிக்கு யாரும் விதிவிலக்கல்ல! எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள் அது வேறோருவருடையதாகிறது. இந்த மாற்றம் உலக நியதி ஆகும்.

Thursday 19 November 2015

மரணம் இப்படித்தான் இருக்குமா - III

ல லட்சம் வருடங்களுக்கு முன்பு தற்போது தனித்தனியாக உள்ள ஆஸ்திரேலியா அண்டார்ட்டிகா தென் அமெரிக்கா ஆப்பிரிக்கா இந்தியா ஆகிய பகுதிகள் ஒன்றாக இருந்தது என்றும் அதற்கு பெயர்தான் லெமூரியா கண்டம் என்றும்
புவியியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள் தொடர்ச்சியான மிகப்பெரும் கடல் கோள்களால தாக்கப்பட்டு அந்தக் கண்டம் பல கூறுகளாகப் பிரிந்து விட்டது என்றும் வல்லுநர்கள் கருதுகிறார்கள். இதற்கு ஆதாராமாக ஆஸ்திரேலியா அண்டார்டிகா கண்டங்களில் உள்ள மலைத் தொடர்களின் அமைப்புகள் ஒரே மாதிரி இருப்பதாகவும் அதற்கு இரு கண்டங்களில் உள்ள கற்களின் அமைப்பை நுண்ணியமாக ஆராய்ந்த பின்பே இந்த முடிவுக்கு வந்ததாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

லெமுரியா கண்டம் இருந்ததற்கான ஆதாரமும் அது மிகப் பெரும் கடல் சீற்றத்தால் அழிந்து போய் இருப்பதற்கான ஆதாரமும் 19ம் நூற்றாண்டில்தான் கிடைத்தது என்று பிரிட்டீஷ் விஞ்ஞானிகள் கூறினாலும் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பே மிகப்பெரும் கடல் சீற்றம் ஏற்பட்டு பெரும் நிலப்பரப்பு ஒன்று அழிந்து போனதாக பாரதத்தின் புனித மிக்க பல நூல்கள் விரிவாக எடுத்துக் கூறுகின்றன. அவற்றைப் பற்றி சிறிது பார்போம்.

மாபெரும் ஜலப் பிரளயம் பூமியில் ஏற்பட்டது. உலகெங்கும் உள்ள உயிர்கள் நீரில் மூழ்தி அழிந்த போது விஷ்ணு மச்ச அவதாரம் எடுத்து மனுவையும் மற்றைய ஜீவன்களின் ஒவ்வொரு ஜோடியையும் ஒரு பேழையில வைத்து ரட்சித்ததாக மச்ச புராணம் கூறுகிறது. மேலும் இந்தக் கடல் கோள் பற்றி அதர்வண வேதத்தில் மிக விரிவாகக் கூறப்பட்டு இருக்கிறது. அதர்வண வேதத்தில் கூறப்பட்டு இருக்கின்ற கருத்துக்களே சுமேரியர்களின் பிரளயக் கதையாக இருக்கிறது என்று டாக்டர் ஹேன் என்பவர் சுறுகிறார். வேத நூலில் பிரளய காலத்தில் சத்ய வரத மனு என்பவர் உயிர்த்தொகுதிகள் அழிந்து போகாமல் காப்பாற்றியதாகவும் கூறப்படுகிறது.

பாகவத்தில் கடல்கோள் பற்றி வேதத்திலும் மச்சபுராணத்திலும் கூறப்பட்ட விஷயங்களே இருந்தாலும் உயிர் வகைகளைக் காப்பாற்றியது திராவிட பதி என்ற குறிப்பு உள்ளது. சத்ய வரத மனுவைப் பற்றிய விளக்கத்தைப் பார்க்கும்போது அவன் பொதிகை மலையில் தவம் செய்தான் என்று இருக்கிறது. திராவிட பதியும் பொதிகை மலையில் தான் இருந்தான் என்று பாகவதம் கூறுகிறது. எனவே இந்த இரண்டு பெயர்களும் ஒரே நபருக்கு உடையதுதான் என்ற முடிவுக்கு நாம் வர வேண்டி உள்ளது.

தொல் பழமை காலத்தில் புகழ் பெற்ற நகரமாக விளங்கிய பாபிலோனில் ஜலப்பிரளயத்தைப் பற்றி ஒரு கதை உண்டு. அது கி.மு. 300ம் ஆண்டுதான் எழுத்து வடிவம் பெற்றது. பெரோஷஸ் என்பவர் இதை எழுதி வைத்தள்ளார். அதில் அணு என்பவன் பிரளயத்தின் போது உயிர்களை ரட்சித்து பாபிலோனியர்க்கு விவசாயம் செய்வது உட்பட நாகரீகங்கள் பலவற்றைக் கற்றுக் கொடுத்ததோடு மனிதத் தலைமுறைகளின் சட்டதிட்டங்களையும் வகுத்துக் கொடுத்தான் எனக் கூறப்படுகிறது. வேதங்களில் வருகின்ற மனுவிற்கும் பெரோஷஸ் நூலில் குறிப்பிடப்படும் பிரளய காட்சிக்கும் அதிக வித்யாசம் இல்லை.

தென் அமெரிக்க நாட்டின் நடுப்பகுதியில் இன்கா என்ற பெயரில் பழங்குடி மக்கள் சிறிய குழுக்களாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் தங்களது இனம் தோன்றிய விதத்தைப்பற்றி புராதனமான நம்பிக்கை ஒன்றை வைத்திருக்கிறார்கள். ஆரம்பக்காலத்தில் சூரியனும் சந்திரனும் இணைந்து இரு குழந்தைகளைப் பெற்றெடுத்தார்கள் என்றும் அதில் ஆண் குழந்தைக்கு யானாநாம்தா என்ற பெயரும் பெண் குழந்தைக்கு டுடா நாம்கா என்ற பெயருமாக வாழ்ந்து வந்தனர் என்றும் அவர்களின் சந்ததியில பாகாக்கா சம்பினாம்கா என்ற இரு வாரிசுகள் பிறந்ததாகவும் இவர்களிலிருந்துதான் மனுக்குலம் பல்கிப் பெருகியதாகவும் நம்புகிறார்கள்.
இம்மக்களின் இந்த நம்பிக்கை கதையில் மேலும் சில தகவல்கள் கிடைக்கிறது. பூமியில் ஜனப்பெருக்கம் அதிகமாகி விட்டதனால் அது பாரம் தாங்காமல் திணறியது. அப்போது ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாக மண்ணிற்குள் இருந்து தண்ணீர் கொப்பளித்து பிரவாகமாக வெளிப்பட்டது. நிலப்பகுதி முழுமைக்கும் தண்ணீரின் அளவு ஏறிக்கொண்டே சென்றதனால் பாகாக்காவும் அவனது மனைவியும் கையில் கிடைத்த உயிரினங்களை எல்லாம் பிடித்து ஒரு பேழையில் அடைத்துக் கொண்டு தாங்களும் அதில் ஏறி ஜலப்பிரளயத்திலிருந்து தப்பி தண்ணீர் வடிந்தபின் பிரஜா உற்பத்தியில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment