மனதால் நேசிக்கும் எந்த ஒரு பொருளையும் மனிதன் என்றாவது ஒருநாள் பிரிந்தே ஆகவேண்டும். இந்த நியதிக்கு யாரும் விதிவிலக்கல்ல! எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள் அது வேறோருவருடையதாகிறது. இந்த மாற்றம் உலக நியதி ஆகும்.

Monday 16 November 2015

ஆவிவடிவம் உடலைவிட்டு விலகும்பொழுது.....

விவடிவம் உடலைவிட்டு விலகும்பொழுது நாம் வாழ்ந்து முடிந்துவிட்ட வாழ்க்கை முழுவதும் மூலை முடுக்குகள் உட்பட நம் மனக்கண் முன் படக்காட்சி போல் ஒருகணம் தோன்றி மறையும். நாம் பெற்ற அனுபவங்கள் நாம் புரிந்த நல்வினை, தீவினைகள் நாம் அடைந்த வெற்றிகள் தோல்விகள் நமது விருப்புவெறுப்புகள் எல்லாம் ஒருங்கிணைந்து ஆத்மாவின் சூட்சம ஒளியில்  பதிவாகிவிடுகிறது. காரண சரீரத்தில் நிறுத்தி வைக்கப்படும் இப்பதிவின் வினைப்பயனாகவே நமது அடுத்த நிலை நிர்ணயிக்கப்படுகிறது.

இதைதான் பகவத் கீதையும் திரும்பத் திரும்பச் சொல்லுகின்றது!

ஒருவன் எவ்வளவு தான், தனது வாழ்நாளின், தீய செயல்கள் செய்திருந்தாலும், அவனது மரணம் நிகழும் கணத்தில் உள்ள அவனது மனநிலையே, அவனது அடுத்த பிறப்பைத் தீர்மானிக்கின்றது என்று கூறுகின்றது! இதையே தான் சைவ மதமும், மறைபொருளாகக் கூறுகின்றது!

மரணம் ஏற்படும் நேரம், எதிர்வு கூறப்பட முடியாததால், எப்போதும் இறைவனையே நினைத்துக்கொண்டிருக்கும் படி, அது கூறுகின்றது!
'நமசிவாய' அல்லது 'சரவணபவ' அல்லது ' சிவ சிவா' என்பதும், தமது பிள்ளைகளுக்குத் தெய்வங்களின் பெயர்களை வைத்து அழைப்பதுவும்,  இந்த இறை நினைவை எப்போதுமே மறக்காமல் இருப்பதற்காகவே.

விரதங்கள், ஆலயதரிசனங்கள், தீட்சைகள் என்பனவும், இதே நோக்கத்திற்காகவே அனுஷ்டிக்கப்படுகின்றன!

ஆனால், இவை எல்லோருக்கும் அவசியமில்லை! ஆசைகளில் தமது மனதை அதிகம் அலைய விடாதவர்களுக்கு (ஜீவன் முத்தர்/ சித்தர்கள்/ ஞானிகள்) மேலுள்ளவை அவசியமில்லை!

ஆயினும், நமது ஆலயவழிபாடானது, அதன் உண்மையான நோக்கத்தில் இருந்து விலகி, ஆசைகளையும், ஆணவத்தையும், தனி மனித அகங்காரங்களையும், வளர்க்கும் ஒரு இடமாக மாறி வருகின்றது மிகவும் கவலைக்குரியது!

சாதாரண உடைகள் அணிந்து வழிபாடு செய்ய வேண்டிய நாம், இன்று விலையுயர்ந்த சேலைகளும், பட்டு வேட்டிகளும், புலிப் பல்லுச் சங்கிலிகளும், அணிந்து செல்வதோடு மட்டுமன்றி, நாம் வணங்கும் தெய்வங்களுக்கும் அதையே செய்கின்றோம்!

No comments:

Post a Comment