மனதால் நேசிக்கும் எந்த ஒரு பொருளையும் மனிதன் என்றாவது ஒருநாள் பிரிந்தே ஆகவேண்டும். இந்த நியதிக்கு யாரும் விதிவிலக்கல்ல! எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள் அது வேறோருவருடையதாகிறது. இந்த மாற்றம் உலக நியதி ஆகும்.

Thursday 19 November 2015

மரணம் இப்படித்தான் இருக்குமா - II

ரோப்பிய பெண்மணியின் அனுபவமும் அரேபிய இளைஞன் இந்தியச் சிறுவன் ஆகியோரின் அனுவங்கள் மட்டுமே இங்கு கூறப்பட்டதற்கு முக்கியமாக காரணம் உண்டு. இன்று உலகில் இருக்கும் கலாச்சாரங்களில் முக்கியமானது இந்து இஸ்லாம் கிருஸ்துவ கலாச்சாரங்களே ஆகும். அந்தந்த கலாச்சராத்திற்கு
உட்பட்ட மனிதர்களின் எண்ண ஒட்டங்களும் தங்களது சுய கலாச்சாரத்தின் வெளிப்பாடாகவே அமையும் என்பது உலக நியதி. அதன் அடிப்படையில் இந்த அனுபவங்களைக் தொகுத்து பகுத்து பார்க்கும்போது காலதேச சூழநிலையில் அனுபவசாலிகளின் தன்மைகள் மாறுபட்டு இருந்தாலும் அவர்கள் கூறும் விஷயத்தில் பல ஒற்றுமைகள் இருப்பதை அறிய முடிகிறது.

செத்துப்பிழைத்த மூன்று பேருமே தங்களை மூன்று நபர்கள் வந்து அழைத்ததாகவும் தங்களது பூத உடலைத் தாங்களே பார்த்ததாகவும் மீண்டும் உடலுக்குள் உயிர் நுழையும் போது சிறய அளவில் வேதனையையும் பயத்தையும் அனுபவித்ததாகவும் கூறுகிறார்கள். இது எதேச்சையாகக் கூறப்பட்ட விஷயங்களாகக் கருத இயலாது. இவர்களைத் தவிர மீண்டும் உயிர்பெற்ற பலரும் ஏறக்குறைய இதே மாதிரியான அனுபவங்களைத் தான் பெற்றதாகக் கூறுகிறார்கள்.

தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியும் இன்னும் பல நவீன கருவிகளின் வளர்ச்சியும் பெருகி விட்ட இன்றைய கால கட்டத்தில் ஒருவரைப் போல் மற்றொருவர் கற்பனை செய்து கொள்வதும் திரித்துக் கூறுவதும் இயற்கையான விஷயம் தானே அதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கும் என்று சிலர் எண்ணக் கூடும். ஆனால் அந்த எண்ணம் நியாயமானது அல்ல. கராணம் தகவல் தொழில் நுட்பம் என்பது இல்லாத ஆயிரக்கணக்கான ஆண்டுக்கு முன்னரே இந்த மாதிரியான அமானுஷ்ய விஷயங்களிலும் உலக அறிவைப் பற்றிய ஒற்றுமையான கருத்துக்கள் கூறப்பட்டே இருக்கிறது அவைகளை தற்செயலாக நிகழந்தவைகள் அல்ல என்பதை ஆதாரங்களுடன் தெரிந்து கொண்டால் மேலே குறிப்பிட்ட மூன்று அனுபவங்களும் உண்மைக்குப் புறம்பானவைகள் அல்ல என்பது தெரியவரும்.

No comments:

Post a Comment